தாவணியில் ஜொலிக்கும் பிக்பாஸ் சிவின்!
ADDED : 320 days ago
பிக்பாஸ் சீசன் 6ல் மூன்றாவது இடத்தை பிடித்து பிரபலமானவர் சிவின் கணேசன். மாடல் அழகியான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தார். பிக்பாஸிற்கு பிறகு சிவினுக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வருடம் வெளியான 'மங்கை' என்ற படத்தில் மட்டும் நடித்திருந்தார். இதற்கிடையில் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் சிவின், தற்போது பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி லைக்ஸ் குவித்து வருகின்றன.