ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ்
ADDED : 327 days ago
கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாக ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த நிலையில் ஜெயிலர் 2ம் பாகத்திற்கான அறிவிப்பு புரொமோ படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 5ம் தேதி அன்று சென்னையில் உள்ள ஈ.வி.பி அரங்கத்தில் செட் அமைத்து நடத்த உள்ளனர். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புரொமோ வீடியோவை டிச., 12ம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.