உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை

மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை

சுந்தரி தொடரின் மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார் நடிகை கேப்ரில்லா செல்லஸ். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் தனது வீட்டின் எதிர்ப்பையும் மீறி பல்வேறு தடைகளை தாண்டி இன்று இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் தன் காதலர் ஆகாஷை கணவராக கைபிடித்த அவருக்கு தற்போது குழந்தை பிறக்கவுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சுந்தரி தொடரின் க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கேப்ரில்லாவே தெரிவித்திருந்தார். தற்போது அவர் குழந்தைப்பேறுக்காக தனது சொந்த ஊருக்கு செல்கிறார். இதனையடுத்து ஊருக்கு கிளம்பும் முன் ரயில்வே ஸ்டேஷனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள கேப்ரில்லா மீடியா பயணத்திற்கு ப்ரேக் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !