உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இட்லி கடை படத்தின் தனுஷின் புதிய தோற்றம் லீக்!

இட்லி கடை படத்தின் தனுஷின் புதிய தோற்றம் லீக்!


நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' எனும் புதிய படம் ஒன்றை இயக்கி நடித்து வருகின்றார். 'டாவுன் பிக்சர்ஸ்,வுன்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார்.

இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது .

இதன் படப்பிடிப்பு தேனி, பொள்ளாச்சி, மதுரை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் தனுஷின் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது அங்கு கூடிய மக்கள் தனுஷை ஆரவாரத்துடன் வரவேற்றனர். தனுஷின் புதிய தோற்றத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவில் புதிய லுக்கில் தனுஷ் உள்ளார். இப்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !