‛படைத்தலைவன்' படத்துக்காக இளையராஜா இசையமைத்து எழுதிய பாடல் வெளியானது!
ADDED : 308 days ago
மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன். ‛சகாப்தம், மதுரை வீரன்' போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வால்டர், ரேக்ளா படங்களை இயக்கிய அன்பு இயக்கி வருகிறார். இப்படத்தில் சண்முக பாண்டியனுடன் எம்.எஸ். பாஸ்கர், யாமினி சந்தர், கஸ்தூரிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
காட்டுப் பகுதியில் நடக்கும் கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஒரு யானை உடன் இணைந்து நடித்திருக்கிறார் சண்முக பாண்டியன். இந்த நிலையில் தற்போது இந்த படைத்தலைவன் படத்தின் முதல் பாடலாக ‛உன் முகத்தைப் பார்க்கலையே' என்ற ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்கள். இளையராஜா எழுதியுள்ள இந்த பாடலை, அனன்யா பட் பாடியுள்ளார்.