எனக்கு பிடித்த பிரபாஸ்: மாளவிகா மோகனன்
ADDED : 308 days ago
தமிழ், மலையாளம், இந்தி படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன், பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் 'ராஜா சாப்' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்த நிலையில் இன்று (டிசம்பர் 1) ஹைதராபாத்தில் நடைபெற்ற, பேஷன் ஷோவில் கலந்து கொண்டார் மாளவிகா மோகனன். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாளவிகா மோகனன், ‛ராஜா சாப்' படம் குறித்து அப்டேட் கொடுத்தார்.
அதாவது, ‛‛ராஜா சாப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் சிறப்பாக வந்துகொண்டு உள்ளது. மேலும் எனக்குப் பிடித்த பிரபாஸ் இந்தப் படத்தில் உள்ளார். ராஜா சாப் எனது முதல் தெலுங்கு படம் என்பதால் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்'' எனத் தெரிவித்துள்ளார் மாளவிகா.