2-வது திருமணம் செய்யும் நாக சைதன்யாவுக்கு நாகார்ஜுனா அளிக்கும் விலை உயர்ந்த பரிசு
ADDED : 315 days ago
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாகசைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்தார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். அதையடுத்து தற்போது இன்னொரு நடிகையான சோபிதா உடன் காதல் ஏற்பட்டு அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ஏற்கனவே நடைபெற்ற நிலையில் டிசம்பர் நான்காம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தனது மகன் நாக சைதன்யாவுக்கு திருமண பரிசாக லெக்சஸ் எல்எம் எம்பிவி ரக காரை அவருக்கு பரிசளிக்க போகிறாராம் நாகார்ஜுனா. இந்த காரின் விலை இரண்டரை கோடியாம்.