கமல் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்
ADDED : 320 days ago
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால், இதுவரை தமிழில் முக்கிய நடிகரான கமல்ஹாசனுக்கு இசையமைத்தது இல்லை .
சமீபத்தில் கமல் தயாரிப்பில் வெளிவந்த 'அமரன்' படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இதற்காக இவருக்கு பாராட்டுகள் வெகுவாக வந்தன. இந்நிலையில், கமல்ஹாசன் நடிப்பில் அன்பறிவு இயக்கத்தில் கமலின் 237வது படத்திற்கு ஜி.வி.பிரகாஷை இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 2025ம் ஆண்டில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.