உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புஷ்பா ஸ்ரீ வள்ளி என எழுதப்பட்ட புடவையுடன் வலம் வரும் ராஷ்மிகா

புஷ்பா ஸ்ரீ வள்ளி என எழுதப்பட்ட புடவையுடன் வலம் வரும் ராஷ்மிகா

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் ஸ்ரீ வள்ளி என்ற வேடத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. அந்த கதாபாத்திரம் அவருக்கு ஹிந்தி சினிமா வரை மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. இந்த நிலையில் தற்போது புஷ்பா-2 படத்திலும் அல்லு அர்ஜுனின் மனைவியாக அதே ஸ்ரீ வள்ளி என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் ராஷ்மிகா. இந்த நிலையில் இந்த புஷ்பா- 2 படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த ராஷ்மிகா, புஷ்பா ஸ்ரீ வள்ளி என டிசைன் செய்யப்பட்ட புடவையை கட்டி இருக்கிறார். அந்த புடவையுடன் ஒரு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. புஷ்பா 2 படம் நாளை உலகம் முழுக்க சுமார் 12 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !