மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா
ADDED : 326 days ago
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் ட்ரெண்டிங் ஜோடி. காதல் ஜோடியாகவும் வலம் வருகிறார்கள். இவர்கள் ஏற்கனவே கீதம் கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மூன்றாம் முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தை ஷியாம் சிங்கா ராய் பட இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் இயக்குகிறார். விஜய் தேவரகொண்டாவின் 14வது படமாக இது உருவாகிறது. இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.