மேலும் செய்திகள்
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
276 days ago
கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த்
276 days ago
வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம்
276 days ago
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு என்பதாக இல்லாமல் சிலருக்கு ஒரு வாழ்க்கையாக இருக்கிறது. முதல் நாள் முதல் காட்சியாக தங்களது அபிமான நடிகர்கள் நடித்த படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என சில துடிக்கிறார்கள். அப்படியான துடிப்பு அவர்களது வாழ்க்கையை இழக்கவும் வைத்துவிடுகிறது.
கடந்த வருடம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த அஜித்தின் 'துணிவு' படத்தை முதல் நாள் முதல் காட்சியாக அதிகாலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க வந்தார் இளைஞர் ஒருவர். ஆர்வமிகுதியில் லாரி மீது நடனமாடிக் கொண்டிருந்தவர் கீழே தவறி விழுந்து அகால மரணம் அடைந்தார். அதன் பின் தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்குவதை நிறுத்தி வைத்தது.
இருந்தாலும் சில நடிகர்களின் ரசிகர்கள் அதிகாலை காட்சி வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்று சென்னையில் ஒரு உயிர்ப்பலியை வாங்கிய முதல் நாள் முதல் காட்சி, நேற்று ஹைதராபாத்தில் நடந்து அதிர்வலையை ஏற்படுத்திவிட்டது.
அல்லு அர்ஜுன் நடித்து இன்று வெளியான 'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. அளவுக்கதிகமான கூட்டம் வந்ததால் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 39 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்தார். கணவர் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் நேற்று படம் பார்க்கச் சென்றுள்ளார். குழந்தைகள் இருவரும் நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் முதல் நாள் முதல் காட்சிக்கு பல சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசும் அதன் பின் அப்படியான காட்சிகளுக்கு அனுமதி தருவதை நிறுத்திவிட்டது. தற்போது ஆந்திர அரசு அனுமதி வழங்கிய பிரிமியர் காட்சிகள் குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது. இத்தனைக்கும் நேற்று கூட்ட நெரிசல் ஏற்பட்ட அந்தத் தியேட்டரில் அப்போது அல்லு அர்ஜுன் படம் பார்க்கச் சென்றுள்ளார். அவர் அங்கு வந்ததாலும் இப்படி நெரிசல் ஏற்பட்டது என்றும் சொல்கிறார்கள்.
ஆந்திர அரசு, இனி இம்மாதிரியான பிரிமியர் காட்சிகளுக்கும், அதிகாலை காட்சிகளுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்றும், தமிழகத்தில் உள்ளது போல காலை 9 மணிக்கு மட்டுமே காட்சிகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் பலர் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
276 days ago
276 days ago
276 days ago