உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை!

சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை!


மலையாள நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி மலையாள சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஜகமே தந்திரம், ஆக்ஷன், பொன்னியின் செல்வன் 1,2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது தமிழில் 'தக் லைப்' படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விலங்கு வெப் தொடர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கருடன் படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !