அமெரிக்காவில் 10 மில்லியன் வசூலை நெருங்கிய 'புஷ்பா 2'
ADDED : 318 days ago
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.
படம் வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே 10 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை நெருங்கிவிட்டது. தற்போது வரை 9.7 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாக வினியோக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 82 கோடி ரூபாய்.
கடந்த ஐந்து நாட்களில் இப்படம் மொத்தமாக 900 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. படம் வெளியான ஒரு வாரத்திற்குள்ளாக 1000 கோடி வசூலைப் பிடிக்கும் என்பது உறுதி. அதற்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன.