உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ''ஸ்ரீவள்ளி என் 2வது அடையாளம்'': ராஷ்மிகா நெகிழ்ச்சி

''ஸ்ரீவள்ளி என் 2வது அடையாளம்'': ராஷ்மிகா நெகிழ்ச்சி


சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 4 நாளில் உலகம் முழுவதும் ரூ.829 கோடி வசூலித்துள்ளது. இப்படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராஷ்மிகாவின் நடிப்பும் பலரால் பாராட்டை பெற்றுள்ளது.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராஷ்மிகா, அந்த கதாபாத்திரம் பற்றி பதிவிட்டதாவது: ஸ்ரீவள்ளிக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு சிறப்பு வாய்ந்தது. அவள் என் 2வது அடையாளமாகிவிட்டாள். எனது திரைப்பயணத்தில் இப்போது நான் இருக்கும் இடத்தைத் தந்தது ஸ்ரீவள்ளிதான். இதற்காக இயக்குநர் சுகுமாருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். இதை சாத்தியமாக்கிய மேதை அவர். புஷ்பா இல்லாமல் ஸ்ரீவள்ளி இல்லை. அதற்காக அல்லு அர்ஜூனுக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை ஸ்ரீவள்ளி வெறும் கதாபாத்திரம் அல்ல; உண்மையாக உணர்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !