2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் ரஜினியின் 'ஜெயிலர்-2'
ADDED : 382 days ago
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த 2023ம் ஆண்டு திரைக்கு வந்த படம் 'ஜெயிலர்'. அனிருத் இசை அமைத்த இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், சிவராஜ் குமார், மோகன்லால், ஜாக்கிஷெராப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் 'ஜெயிலர்-2' படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார் நெல்சன். ஜெயிலர் படத்தை விட பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தொடங்கி 2026ம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள நெல்சன், இந்த படத்துக்காக 13 மாதங்கள் பணியாற்ற திட்டமிட்டுள்ளார்.