மீண்டும் ஹாலிவுட்டுக்கு செல்லும் தனுஷ்!
ADDED : 382 days ago
தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கும் தனுஷ், 'குபேரா' படத்தை முடித்துவிட்டு 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் ஏற்கனவே 2017ம் ஆண்ட்டில் 'தி எக்ஸ்டாடினரி ஆப் பகிர்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்த தனுஷ், அதன்பிறகு 2021ம் ஆண்டில் 'தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் அடுத்து மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறாராம். அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சிட்னி ஸ்வீனி என்ற ஹாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.