4வது முறையாக கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு!
                                ADDED :  324 days ago     
                            
                             
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் 'தக்லைப்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. கதைப்படி இந்த படத்தில் அவர் கமல்ஹாசனின் மகனாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வரும் சிம்பு, அதையடுத்து கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார். ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு' போன்ற படங்களில் நடித்துள்ள சிம்பு, இப்போது நான்காவது முறையாக அவர் இயக்கத்தில் நடிக்க போகிறார்.