கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் போட் ஹவுஸ் வாங்கிய ஆலியா மானசா!
ADDED : 301 days ago
ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் ஆலியா மானசா. அதோடு அந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆலியா மானசாவுக்கு தற்போது ஒரு மகனும், மகளும் உள்ளார்கள். இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் ஒரு புதிய வீடு கட்டியிருப்பதாக தெரிவித்திருந்த ஆலியா மானசா, தற்போது கேரளா ஆலப்புழாவில் இரண்டு கோடி மதிப்பில் போட் ஹவுஸ் ஒன்றை வாங்கி இருக்கிறார். ஆலப்புழா சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால் இதன் மூலம் அவருக்கு பெரிய அளவில் வருமானம் வரும் என்று கூறப்படுகிறது. இந்த போட் ஹவுஸ், இரண்டு படுக்கை அறை, பிரமாண்ட டைனிங் டேபிள் என நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.