உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100வது நாளில் 'தி கோட்'

100வது நாளில் 'தி கோட்'

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா மற்றும் பல நடிப்பில் செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'.

இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் சுமார் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இன்றுடன் இப்படம் 100வது நாளைத் தொட்டுள்ளது. 100 நாள் படங்கள் என்பதெல்லாம் இந்தக் காலத்தில் அபூர்வமாகிவிட்ட நிலையில் 100 நாளைத் தொடுவது சாதாரண விஷயமல்ல. சென்னை மதுரவாயலில் உள்ள எஜிஎஸ் தியேட்டரில் இந்தப் படம் 100 நாளைத் தொட்டுள்ளது.

இந்த வருடத்தில் 100வது நாளைத் தொட்டுள்ள இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு ராமராஜன் நடிப்பில் வெளிவந்த 'சாமானியன்' படம் 100 நாள் ஓடியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !