உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விக்ரம் 63வது படத்தின் அறிவிப்பு வெளியானது

விக்ரம் 63வது படத்தின் அறிவிப்பு வெளியானது

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான படம் தங்கலான். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லை. அதையடுத்து அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். இந்த படத்தின் டீசர் கடந்த வாரத்தில் வெளியானது. இதையடுத்து மண்டேலா, மாவீரன் படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் தனது 63 வது படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். இந்த படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் விக்ரம் 63 வது படம் குறித்த அறிவிப்பை தற்போது ஒரு போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !