தனுஷ், துல்கர் சல்மான் பட இயக்குனருடன் சூர்யா கூட்டணி?
ADDED : 294 days ago
நடிகர் சூர்யா நடித்து கடைசியாக வெளிவந்த 'கங்குவா' படம் தோல்வி அடைந்தது .கடைசி 10 வருடங்களில் சூர்யா நடித்து திரையரங்குகளில் வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியது.
சமீபகாலமாக வெற்றி படத்திற்காக புதிய இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார் சூர்யா. இந்த வரிசையில் கார்த்திக் சுப்பராஜ், ஆர்.ஜே. பாலாஜி, வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷை வைத்து வாத்தி, துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கும் அடுத்த படத்தையும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் நிறுவனர் நாக வம்சி சமீபத்தில் சூர்யாவை சந்தித்து வெங்கி அட்லூரி இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.