உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மெய்யழகன் படத்திற்கு இந்துமதியின் ஆதரவு குரல்

மெய்யழகன் படத்திற்கு இந்துமதியின் ஆதரவு குரல்

நடிகை இந்துமதி மணிகண்டன் தமிழில் கடைக்குட்டி சிங்கம், மெய்யழகன், காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம், டிராகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை நெடுந்தொடரிலும் நடித்து வருகிறார். தற்போது இந்துமதி அளித்த பேட்டி ஒன்றில் மெய்யழகன் படம் குறித்து மனம் திறந்துள்ளார்.

அதில், மெய்யழகன் படம் மலையாளம், மராத்தி வேறு எந்தவொரு மொழிகளில் உருவாகி இருந்தாலும் படம் எவ்வளவு ஸ்லோவாக இருந்தாலும் அந்த படத்தினை ரசிகர்கள் ஏற்று கொண்டாடி இருப்பார்கள். தமிழில் இந்த மாதிரி படங்கள் வெளியாவதில்லை என ரசிகர்கள் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், மெய்யழகன் படம் வெளிவந்த போது ஸ்லோவாக உள்ளது. பேசிக்கிட்டே இருக்காங்க என பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் தமிழில் படத்தின் நீளத்தை குறைக்க வேண்டி இருந்தது. ஆனால், மெய்யழகன் படம் ஜெர்மனி நாட்டில் வெளியான போது அங்கு படத்திலிருந்து ஒரு நிமிட காட்சியை கூட குறைக்கவில்லை. அங்கு ரசிகர்கள் அனைவரும் ரசித்து வெற்றி படம் ஆக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !