ராஜா சாப் படப்பிடிப்பில் பிரபாஸிற்கு காயம் : ஜப்பான் ட்ரிப் கேன்சல்
ADDED : 310 days ago
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் கல்கி 2898 ஏடி. இந்த படம் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகி 1200 கோடி வசூலித்தது. இந்நிலையில் இந்த கல்கி படத்தை வருகிற ஜனவரி 3ம் தேதி ஜப்பான் மொழியில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இதனால் விரைவில் ஜப்பானில் பிரமோசன் நிகழ்ச்சி நடத்த அந்தப் படக் குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் ராஜா சாப் படத்தின் சண்டைக் காட்சிகள் நடித்த வந்தபோது ஏற்பட்ட காயத்தால் தற்போது பிரபாஸ் சிகிச்சை எடுத்து வருகிறார். அதனால் கல்கி படத்திற்காக ஜப்பானில் நடைபெறும் பிரமோசன் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக ஜப்பான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பிரபாஸ்.