உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விடுதலை 2 - யாருக்கு முக்கியத்துவம் அதிகம்?

விடுதலை 2 - யாருக்கு முக்கியத்துவம் அதிகம்?

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி மற்றும் பலர் நடித்துள்ள 'விடுதலை 2' படம் நாளை மறுதினம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது.

கடந்த வருடம் வெளிவந்த இதன் முதல் பாகத்தில் நடிகர் சூரிக்குத்தான் முக்கியத்துவம் அதிகம் இருந்தது. விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சூரியை விடவும் குறைவான நேரத்தில் வரும்படிதான் நடித்திருந்தார்.

ஆனால், இரண்டாம் பாகத்தில் சூரியை விடவும், விஜய் சேதுபதிக்குத்தான் முக்கியத்துவம் அதிகம் இருக்கிறது என்கிறார்கள். அவரது பிளாஷ்பேக், மஞ்சுவாரியருடனான காதல் என அதில் படம் அதிக நேரம் பயணிப்பதாகத் தகவல்.

முதல் பாகத்தில் விஜய் சேதுபதி எந்த அளவிற்கு இருந்தாரோ அதேபோல இந்த இரண்டாம் பாகத்தில் சூரி இருக்கலாம் என்கிறார்கள். யாருக்கு முக்கியத்துவம் என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடப் போகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !