மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
262 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
262 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
262 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
262 days ago
உலக அளவில் பலராலும் கொண்டாடப்படும் விளையாட்டுக்களில் முதன்மையானது கால்பந்து. 2022ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜன்டினா அணி வென்று, நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. அதைக் கொண்டாடும் விதத்தில் அதன் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு அதற்கு இளையராஜா இசையில் 'குணா' படத்தில் இடம் பெற்ற 'கண்மணி அன்போடு' பாடலைப் பதிவு செய்துள்ளது பிபா வேர்ல்டு கப் இன்ஸ்டாகிராம்.
அதைப்பார்த்து தமிழ் சினிமா ரசிகர்களும், கால்பந்து ரசிகர்களும் நிறைய கமெண்ட்டுகளைத் தமிழிலும் பதிவிட்டுள்ளனர். மெஸ்ஸி தலைமையிலான அணி அடித்த அந்த வெற்றிக்கான கோல், அதைத் தொடர்ந்து அணி வீரர்களின் அழுகை, கட்டியணைப்பு, கோப்பையைப் பெற்றது உள்ளிட்ட எமோஷலான அந்தக் காட்சிகளுடன் 'கண்மணி' பாடலும் சரியாகப் பொருந்தி, அந்தப் பதிவைப் பார்க்கும் போது நமக்கும் உணர்ச்சிகரமாக அமைந்துள்ளது.
262 days ago
262 days ago
262 days ago
262 days ago