தெலுங்கு இயக்குனருடன் இணையும் அமீர்கான்
ADDED : 287 days ago
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்து வெளிவந்த கடைசி சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது. தற்போது 'சித்தாரே சமீன் பார்' படத்தில் நடித்துள்ளார்.
இது அல்லாமல் தமிழில் ரஜினியின் 'கூலி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமீர்கான் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்காக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடப்பலி உடன் பேச்சு வார்த்தையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் வாரிசு, மகரிஷி, தோழா ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.