உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விடுதலை 2 படத்திற்கு ஒருநாள் மட்டும் 5 காட்சிக்கு அனுமதி

விடுதலை 2 படத்திற்கு ஒருநாள் மட்டும் 5 காட்சிக்கு அனுமதி

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி மற்றும் பலர் நடித்துள்ள 'விடுதலை 2' படம் நாளை டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. கடந்தாண்டு வெளிவந்த இதன் முதல்பாகத்தில் சூரிக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என தெரிகிறது.

விடுதலை 2 படம் நாளை வெளியாகும் நிலையில் இந்த படத்திற்கு நாளை மட்டும் சிறப்பு காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி நாளை காலை 9 மணிக்கே முதல் காட்சி துவங்குகிறது. நாளை மட்டும் 5 காட்சிகள் தியேட்டரில் திரையிட்டு கொள்ளலாம்.

இதனிடையே இந்த படத்தின் நீளம் 2 மணிநேரம் 53 நிமிடங்கள் இருந்தது. இப்போது அதில் 8 நிமிடத்தை குறைத்துள்ளனர். இதனால் விடுதலை 2 படம், 2 மணிநேரம் 45 நிமிடங்கள் ஓடும் விதமாக தியேட்டரில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !