'சகுனி' இயக்குனர் சங்கர் தயாள் காலமானார்
ADDED : 341 days ago
சென்னை : தமிழில் கார்த்தி நடித்த 'சகுனி' படத்தின் இயக்குனர் சங்கர் தயாள், 54, மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.
'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என புதிய படத்தை இயக்கியுள்ளார். அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் மார்க் ஸ்டுடியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சங்கர் தயாள், அப்படத்தின் நிகழ்ச்சிக்காக புறப்பட்டு சென்றார். அவர் செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக, அவரை கொளத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.