சீரியலில் கம்பேக் கொடுக்கும் ஆனந்த் பாபு
ADDED : 300 days ago
80கள் 90கள் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த ஆனந்த் பாபு ஒரு விபத்திற்கு பின் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். சின்னத்திரையில் மெளனராகம் தொடர் அவருக்கு நல்லதொரு கம்பேக்காக இருந்தது. அதனை தொடர்ந்து முத்தழகு, மெளனராகம் 2, கிழக்கு வாசல் தொடரில் நடித்திருந்த அவர் தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள பூங்காற்று திரும்புமா தொடரின் மூலம் மீண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் கம்பேக் கொடுத்துள்ளார். சினிமாவில் கோட்டைவிட்டாலும் சீரியலில் செகண்ட் இன்னிங்சை தொடங்கிய ஆனந்த் பாபுவிற்கு ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.