2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு
தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே, அதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடித்தவர், மீண்டும் விஜய்யின் 69 வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதோடு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 44-வது படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது விஜய்யுடன் தான் நடித்து வரும் 69வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் பூஜாஹெக்டே.
இந்த படப்பிடிப்பு சென்னை கடற்கரை பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடற்கரையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது விஜய் மற்றும் தன்னுடைய கால்களை புகைப்படம் எடுத்து அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் பூஜாஹெக்டே. அதோடு இந்த 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு இதுதான் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து விஜய் 69வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் மீண்டும் தொடங்க உள்ளது.