மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
279 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
279 days ago
ராயன் படத்தை இயக்கி நடித்த தனுஷ் அதையடுத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் குபேரா படத்தில் நடித்துள்ளார். அதோடு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்திருப்பவர் தற்போது அப்படத்தின் இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி, நடித்து வருகிறார். இந்த படங்களை அடுத்து நான்கு புதிய படங்களில் கமிட்டாகியுள்ளார் தனுஷ். அதில் ஒரு படத்தை ராஜ்குமார் பெரியசாமியும், இன்னொரு படத்தை போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜாவும் இயக்கப் போகிறார்கள். இது தவிர இன்னும் இரண்டு படங்களில் நடிக்கும் தனுஷ், அதில் ஒரு படத்தை தானே இயக்கி நடிக்கவும் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி தமிழ் சினிமாவில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகராக இருக்கிறார் தனுஷ்.
279 days ago
279 days ago