விமர்சனங்களுக்கு மத்தியில் 100 கோடியை நெருங்கும் 'முபாசா'
ADDED : 281 days ago
பிரம்மாண்டமான ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெறும். இந்த ஆண்டில் கடந்த 12 மாதங்களில் அப்படி எந்த ஒரு ஹாலிவுட் படமும் பெரிய அளவிலான வசூலைப் பெறவில்லை. அந்தக் குறையை கடந்த வாரம் வெளியான 'முபாசா - தி லயன் கிங்' படம் தீர்த்து வைத்துள்ளது.
படத்திற்கு இரு வேறு விதமான விமர்சனங்கள் வந்தாலும் அரையாண்டு விடுமுறை நாட்களை நெருங்கி படம் வெளிவந்தது பிளஸ் பாயின்டாக அமைந்துள்ளது. தற்போது படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது 75 கோடி வசூலைக் கடந்துள்ள படம் இந்த வார முடிவில் 100 கோடியை நெருங்கிவிடும் என்கிறார்கள்.
2019ல் வெளிவந்த 'த லயன் கிங்' படம் இந்தியாவில் சுமார் 200 கோடி வரை வசூலித்தது. அந்த வசூலை 'முபாசா' படம் நெருங்குவது சிரமம் என்றும் சொல்கிறார்கள்.