உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கணவர், குழந்தைகளுடன் பாரிஸிற்கு சுற்றுலா சென்ற நயன்தாரா

கணவர், குழந்தைகளுடன் பாரிஸிற்கு சுற்றுலா சென்ற நயன்தாரா

மண்ணாங்கட்டி, டெஸ்ட், ராக்காயி, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக் என பல படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக ஹரி இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் தனது கணவர் விக்னேஷ் சிவன், மகன்களுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் செல்லும் நயன்தாரா தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பாரிஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஈபிள் டவருக்கு விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர், உலக் ஆகியோருடன் சென்றுள்ளார் நயன்தாரா. அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையப்பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். முன்னதாக நேற்று பாரிஸின் ஈபிள் டவரில் தீ விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !