உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளம் வயதில் இரவு முழுக்க குடிப்பேன் - அமீர் கான் ஓபன் டாக்

இளம் வயதில் இரவு முழுக்க குடிப்பேன் - அமீர் கான் ஓபன் டாக்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகரான அமீர் கான், 'சித்தாரே ஜமீன் பர்' எனும் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‛கூலி' படத்தில் சிறப்பு வேடத்திலும் நடித்துள்ளார். சித்தாரே ஜமீன் பர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் அமீர்கான் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, எனது இளம் வயதில் புகை மற்றும் மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்தது. அப்போது நான் இரவு முழுவதும் கூட மது அருந்தி இருக்கிறேன். அது நல்லதுக்கு அல்ல என எனக்கு தெரிந்தும் கூட என்னால் அப்போது மது பழக்கத்தை கைவிட முடியவில்லை. ஆனால், இப்போது மது அருந்தும் பழக்கத்தை முழுவதுமாக கைவிட்டேன் என அந்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் அமீர் கான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !