வாரணாசியில் சாய் பல்லவி சாமி தரிசனம்
ADDED : 280 days ago
அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் ஹிந்தியில் ராமாயணக் கதையில் நடிக்கிறார். சாய் பல்லவி பொதுவாகவே கடவுள் நம்பிக்கை அதிகம் உடையவர். அதிலும் தற்போது ராமாயணம் கதையில் சீதையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சாய்பல்லவி வாரணாசியில் உள்ள அன்னபூரணி தேவி கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு கழுத்தில் மாலை அணிந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு கோவிலில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக கங்கை கரையில் நடந்த ஆரத்தி நிகழ்விலும் பங்கேற்று வழிபட்டார். இதுதொடர்பான போட்டோக்கள் வலைதளங்களில் வைரலானது.