‛வீர தீர சூரன்' கதைகளம் குறித்து பகிர்ந்த இயக்குனர்
ADDED : 279 days ago
சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் தற்போது ரிலீஸூக்கு தயாராகியுள்ள படம் ' வீர தீர சூரன் 2' . இதில் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், சித்திக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.
இப்படம் குறித்து அருண்குமார் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, வன்முறை, மன்னிப்பு, குற்றவுணர்வு இது மூன்றையும் உணர்த்தும் படமாக வீர தீர சூரன் உருவாகியுள்ளது. இந்த கதை எடுத்தவுடன் ஆரம்பம் ஆகிவிடும் ஒரு ஊர்ல - னு கதை சொல்லி தான் பழகியிருக்கேன். ஆனால் இதில் அப்படியில்லை எடுத்தவுடன் கதை ஆரம்பம் ஆகிவிடும். அதன்பிறகு தான் எந்த ஊர்ல யார் என்பது தெரிய வரும். இதெல்லாம் கொஞ்சம் சவாலாக இருந்தது. வீர தீர சூரன் பாகம் 1 கண்டிப்பாக வரும். ஆனால் அதற்கு கால அவகாசம் ஆகும் என தெரிவித்துள்ளார்.