உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஷாலுக்கு கண்டிஷன் போட்ட நேஹா

விஷாலுக்கு கண்டிஷன் போட்ட நேஹா

பாக்கியலெட்சுமி தொடரில் நடித்து வந்த விஷால், பிக்பாஸ் சீசன் 8-ல் விளையாடி வருகிறார். இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால், இம்முறை போட்டியாளர்களின் குடும்பத்தினர் தவிர்த்து காதலர்கள், நண்பர்கள் உள்ளே வந்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் விஷாலை பார்க்க டிவி நடிகை நேஹா பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் பாக்கியலெட்சுமி தொடரில் இணைந்து நடித்திருந்த நிலையில், அடிக்கடி ஒன்றாக போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ளே நுழைந்த நேஹா, விஷாலிடம் சவுந்தர்யாவை தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க சொல்லி கறாராக கண்டிஷன் போட்டுள்ளார். மேலும் பல அட்வைஸ்களை விஷாலுக்கு வழங்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !