உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள ‛சிக்கந்தர்' டீசர் வெளியீடு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள ‛சிக்கந்தர்' டீசர் வெளியீடு


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் சிக்கந்தர். சல்மான்கான் இரண்டு வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் , காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் 2025ம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைகளில் நேற்று முன்தினம் சல்மான்கானின் பிறந்த நாளையொட்டி சிக்கந்தர் படத்தின் டீசர் டிசம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சிக்கந்தர் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் அதிரடியான சண்டை காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !