மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
276 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
276 days ago
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க 'டிமான்டி காலனி, டிமான்டி காலனி 2' ஆகிய படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து படத்தின் மூன்றாவது பாகத்திற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டாராம் அஜய் ஞானமுத்து.
அருள்நிதி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். கதாநாயகி யார் என்பதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு பாகங்களின் கதைக்களமும் சென்னையில் இருந்தது. ஆனால், மூன்றாவது பாகத்திற்கான கதைக்களத்தை வெளிநாட்டில் வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்களாம்.
அதற்கான இடங்களைத் தேர்வு செய்ய ஐரோப்பாவில் உள்ள மால்டா தீவுகளுக்கு அஜய் ஞானமுத்து சென்றுள்ளதாகத் தகவல். 2025ம் ஆண்டிலேயே படப்பிடிப்பை ஆரம்பித்து அதே வருடத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். தமிழ்ப் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடும் கோல்டுமைன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறது. விரைவில் படத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம்.
276 days ago
276 days ago