உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவியின் மொத்த குடும்பமும் வரப் போகும் 'கேம் சேஞ்சர்' விழா

சிரஞ்சீவியின் மொத்த குடும்பமும் வரப் போகும் 'கேம் சேஞ்சர்' விழா


விஜய் நடித்து வெளிவந்த 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்த வாரம் ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழாவை ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த வாரக் கடைசியில் அந்த விழா நடக்கும் எனத் தெரிகிறது.

நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் நடித்து வெளிவர உள்ள இந்தப் படத்தின் விழாவில் சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து நடிகர்களும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.

சிரஞ்சீவியின் தம்பியும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாணை சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு. விழாவில் பவன் கல்யாணும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !