மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
276 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
276 days ago
2024ம் ஆண்டு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டில் வந்த படங்களைப் பற்றி நிறையவே படித்து விட்டிருப்போம். அடுத்து 2025ம் ஆண்டில் வெளியாக உள்ள படங்களைப் பற்றிய ஆர்வமும் எதிர்பார்ப்பும் நம்மிடம் வந்திருக்கும்.
பொங்கல் முதல்தான் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. 2025ம் ஆண்டிலும் அதிகப் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 3ம் தேதியன்றே சில சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
“பயாஸ்கோப், எக்ஸ்ட்ரீம், களன், லாரா” ஆகிய படங்கள் அன்றைய தினம் வெளியாக உள்ளன. வழக்கம் போல இந்த ஆண்டும் சிறிய பட்ஜெட் படங்களுடன் புதிய வெளியீடுகள் ஆரம்பமாகின்றது.
பொங்கலுக்கு 'விடாமுயற்சி, வணங்கான்' படங்களும், அடுத்து ஜனவரி 24ல் 'பாட்டல் ராதா' படமும், ஜனவரி 31ல் 'அகத்தியா' படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன. 'வீர தீர சூரன், நேசிப்பாயா' ஆகிய படங்களும் ஜனவரி மாதத்தில் வெளியாகலாம்.
276 days ago
276 days ago