உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அட்லி படத்தில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மற்றும் கொரியன் நடிகர்!

அட்லி படத்தில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மற்றும் கொரியன் நடிகர்!

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என்று நான்கு ஹிட் படங்களை இயக்கிய அட்லி, அதையடுத்து ஹிந்திக்கு சென்று ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கினார். அந்த படமும் ஹிட் அடித்தது. என்றாலும் தமிழில் விஜய் நடிப்பில் அவர் இயக்கிய தெறி படத்தை ஹிந்தியில் தயாரித்து தோல்வி அடைந்திருக்கிறார்.

இந்த நிலையில் அடுத்தபடியாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் அட்லி. இந்த படத்தில் ரஜினி அல்லது கமலை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க அவர் முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது அட்லி இயக்கும் இந்த புதிய படத்தில் சல்மான்கானுடன் ஒரு தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மற்றும் கொரியன் நடிகர் ஒருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !