ஹரி ஹர வீரமல்லு படத்துக்காக பின்னணி பாடிய பவன் கல்யாண்
ADDED : 278 days ago
ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சரான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ஹரி ஹர வீர மல்லு. இந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க, பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மாத வினாலி என்று தொடங்கும் பாடலை நடிகர் பவன் கல்யாண் பின்னணி பாடியுள்ளார். இந்த பாடலை ஜனவரி 6ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிட இருப்பதாக புத்தாண்டையொட்டி இன்றைய தினம் அறிவித்துள்ளார்கள். இந்த ஹரி ஹர வீரமல்லு படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.