ஜன.23ல் வெளியாகும் மம்முட்டி, கவுதம் மேனன் படம்
ADDED : 246 days ago
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் முதல் முறையாக 'டொமினிக் அன்ட் தி லேடிஸ் பர்ஸ் ' என்கிற மலையாள படம் ஒன்றை இயக்கி உள்ளார். இதில் நடிகர் மம்முட்டி நாயகனாக நடித்திருப்பதோவு அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. தர்புகா சிவா இசையமைக்கின்றார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 2025ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி இப்படம் வருகின்ற ஜனவரி 23ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.