ராஷ்மிகாவின் புதிய பாலிவுட் பட அப்டேட்
ADDED : 295 days ago
தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி மொழி படங்களிலும் தற்போது பிஸியாக நடிக்க துவங்கியுள்ளார் ராஷ்மிகா. குறிப்பாக அனிமல் மற்றும் புஷ்பா 2 படங்களின் வெற்றிக்கு பின் அவரை தேடி நிறைய வாய்ப்புகள் வர துவங்கி உள்ளன. தற்போது ஹிந்தியில் புதிதாக உருவாகும் 'தமா' எனும் ஹாரர் படத்தில் ஆயுஷ்மான் குரானாவிற்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கின்றார். இந்த படத்தினை முஞ்யா பட இயக்குனர் ஆதித்யா சர்போத்தர் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2025ம் ஆண்டு தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வருகிறது.