உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'புஷ்பா 2' டிரைலர் சாதனையை முறியடிக்காத 'கேம் சேஞ்சர்' டிரைலர்

'புஷ்பா 2' டிரைலர் சாதனையை முறியடிக்காத 'கேம் சேஞ்சர்' டிரைலர்

ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' தெலுங்குப் படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் மாலை வெளியானது. நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அந்த டிரைலர் 36.24 மில்லியன் பார்வைகளை யு டியுபில் பெற்றுள்ளது.

'புஷ்பா 2' படத்தின் சாதனையான 44 மில்லியன் பார்வைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாமிடத்தில் இருக்கும் 'குண்டூர் காரம்' சாதனையையும் முறியடிக்க முடியவில்லை. தற்போது மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது 'கேம் சேஞ்சர்' டிரைலர்.

இருந்தாலும் ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் இந்த டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஹிந்தியில் 14 மில்லியன், தமிழில் 12 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

அதே சமயம் அனைத்து விதமான தளங்களிலும் 180 மில்லியன் பார்வைகளை 'கேம் சேஞ்சர்' டிரைலர் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !