பொங்கல் வெளியீட்டில் பின் வாங்கிய படங்கள்
அஜித் நடித்த 'விடாமுயற்சி' படம் பொங்கல் வெளியீடு என்று அறிவித்து பின் வாங்கிய நிலையில் பல படங்கள் பொங்கல் வெளியீடு என புதிதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவற்றில் தற்போது சில படங்கள் பின் வாங்கிவிட்டது.
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படைத் தலைவன்', சுசீந்திரன் இயக்கியுள்ள '2 கே லவ் ஸ்டோரி', சிபி நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' ஆகிய படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகவில்லை என கூறப்படுகிறது. தியேட்டர்கள் சரியாகக் கிடைக்காததால்தான் இப்படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது.
தற்போதைய நிலவரப்படி ஜனவரி 10ம் தேதி 'வணங்கான், மெட்ராஸ்காரன்', டப்பிங் படமான 'கேம் சேஞ்சர்', ஜனவரி 12ம் தேதி 'மத கஜ ராஜா', ஜனவரி 14ம் தேதி 'காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றிலும் எந்தப் படமாவது தள்ளிப் போகுமே என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.