மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி
ADDED : 15 hours ago
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்குப் பிறகு தேசிங்கு பெரியசாமி ஒரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்குவதற்கான முன் தயாரிப்பு பணிகளில் கடந்த பல வருடங்களாக ஈடுபட்டு வந்தார். வரலாற்று பின்னணியில் இந்த படம் உருவாவதாகவும் இருந்தது. இதில் சிம்பு நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் பட்ஜெட் காரணமாக இதன் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக இந்த படத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கிடையில் குறைந்த பட்ஜெட்டில் புதிய படத்தை இயக்குகிறார் தேசிங்கு பெரியசாமி. இதில் நாயகனாக குட் நைட் பட புகழ் மணிகண்டன் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதத்தில் துவங்குகின்றனர். இதில் ஒளிப்பதிவாளர் ஆக ஓம் பிரகாஷ் இணைந்துள்ளார் என்கிறார்கள்.