விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல்
ADDED : 100 days ago
இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தமிழில் ஏய், பகவதி, தம், குத்து உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கியவர். அதன்பின் நடிகராகவும் மாறி வில்லன், குணச்சித்ர வேடங்களில் நடித்தார். இவர் அளித்த ஒரு பேட்டியில் பகவதி படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அந்த படத்தில் விஜய்க்கு தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் தனுஷை தான் கேட்டேன். அப்போது அவர் காதல் கொண்டேன் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் தனுஷ் நடித்தால் B, C சென்டர்களுக்கு நல்லா ரீச் ஆகி விடலாம் என கூறினேன். அதற்கு தனுஷ் தன்னம்பிக்கை உடன் காதல் கொண்டேன் வந்தால் நான் B,C சென்டர்களுக்கு ரீச் ஆவேன் என்றார். அதன் பின்னர் தேடி தான் ஜெய்யை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன் என தெரிவித்துள்ளார்.