கவின் படத்தில் இணைந்த சிம்ரன்
ADDED : 3 days ago
கவின் நடிப்பில் கடந்தாண்டு ‛கிஸ், மாஸ்க்' ஆகிய படங்கள் வெளியாகின. இந்த படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனால் கதை தேர்வில் கவனமுடன் செயல்பட்டு வருகிறார். அடுத்து கென் ராய்சன் இயக்கத்தில் கவினின் 9வது படம் உருவாகிறது. இதில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சாண்டி மாஸ்டர் நடிக்கிறார். திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காதல், காமெடி கலந்து பேண்டஸி ஜானரில் உருவாகிறது. தற்போது இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன் இணைந்துள்ளார். டூரிஸ்ட் பேமிலி பட வெற்றிக்கு பின் சிம்ரன் தனது கதாபாத்திர தேர்வில் கவனமாக, தனக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.